Sunday, 2 February 2025

புணர்தல்

குறிஞ்சி  பாடல்  [  ஐங்குறு நூறு241  ]
------------
புணர்தல்  என்பது   தலைவனும்  தலைவியும்  தாமே  கூடும்  கூட்டம் ஆகும்*
இது  களவு  ஒழுக்கத்தின்  கண்  நிகழ்வது  ஆகும்*பிறர்  அறியாவண்ணம்  தலைவனும்  தலைவியும் மனம்   ஒத்தவராய்  உள்ளமும்  உடலும்  ஒன்றாகி
மகிழ்தல் ஆம்*
  இப்பாடல்  வெறிப்பத்து  என்னும்  பத்து  ப்பாடலுள்  ஒன்றாகும்*
வெறியாடல்  என்பது   வேலன்வெறியாடல்    என  வரும்* வேலன்  கடவுள்
குறிஞ்சி நிலத்தெய்வம்  முருகன்  ஆவன்*  வெறியாடல்  என்பது  தெய்வத்தால்  உண்டான  குறை  நீங்குமாறு செய்யும்  பூசையும்  ஆட்டமும்  ஆகும்*  வேலன்  என்பது  பூசை செய்வானையும் குறிக்கும்*
 
இப்பாடலின்  துறை  பின் வருமாறு:::  தலைவனும்  தலைவியும்  களவு  ஒழுக்கத்தில்  ஈடுபட்டனர்*  தலைவியிடம்  உள்ளமும்  உடலும்  மாறுபட்டது
கண்ட  தாய்  தலைவியை[  இற்செறித்தாள்]   இல்லத்தில்  காவலிட்டாள்* தலைவி தன்  தலவனை  நினைந்து  வருந்தினாள்*தன்னை  ப்பெற்றோர் பிறன்  ஒருவனுக்கு  மணம்  முடிப்பரோ  எனவும் கலங்கி  மெலிந்தாள்* இதன்  காரணம்  உணராத  தாய்   அறிவரை [  சோதிடர்  முதலானோர்]]  வினவவும்  அவர்  அக்குறைபாடு  தெய்வத்தால்  வந்தது என்றனர்*  தெய்வக்குறை  நீங்கின்  மகள் நலம் உறுவாள்  எனக்கருதி ய  தாய்  வேலனை  அழைத்துத் தெய்வக்குறை நீங்கும்  வண்ணம் வெறியாடல்  நிகழ்த்துக  என  வேண்டினாள்*  உண்மைக்  காரணம்  அறிந்த  தோழி  செவிலித்தாய்க்கு  உண்மை உணர்த்தும்  வண்ணம்   அறத்தொடு  நின்று  [[ தலைவி  தன் ஒழுக்கத்தில் குறைவு படாமல் இருத்தல்]]    தலைவியிடம்  கூறும்  கூற்றாய்  இப்பாடல்  வருகிறது*
    பாடலின்  பொருள்-----------
 
அழகிய  பற்களை உடைய  தோழியே ! {{ தோழி  தலைவியை தோழி என்றழைப்பாள்  }} நம்  தாய்  நாம்  உற்ற  துயரம் கண்டு  அதன்  காரணம்
அறிவதற்கு  வேலனை  அழைத்து அதன் காரணம் வினவுவாள்  .ஆனால்  மணம்  கமழும்
 குறிஞ்சி நாட்டின்  தலைமகனுடன் யாம்  கொண்டுள்ள  காதல்  தொடர்பை
அறிந்து  கூற  அவன்  வல்லவனோ ? அவனால்  அது  இயலாதல்லவா?--**
இது பாடலின் பொருள்..
 
இதில் தோழி  தலைவியையும்  உட்படுத்தி  நாம் என்னும்  சொல்லால் குறிப்பிடுகின்றாள்*

 தோழி  மட்டும்  தலைவியின்  களவு  ஒழுக்கத்தை  அறிந்துள்ளாள்*பிறர் அறியார்  *  தலைவி  மெலிந்து வருதுவதற்கு  தெய்வமே  காரணம்  என்பது
பிற மக்கள்  அறிந்த காரணம்** குறீஞ்சி நாட்டுத்தலைவனின்  நட்பை
வேலன்  அறியான்  என்று  செவிலித்தாய்  காதில்  விழுமாறு  தோழி தலைவியிடம்  கூறுகின்றாள்* அருகிலிருந்து  கேட்ட  செவிலித்தாய் தலைவியின்  காதலை  உணர்ந்து கொண்டாள்*தலைவன்  மணம்  வீசும்
குறிஞ்சித்தலைவன்  எனத்தோழி   கூறியதினால்  தலைமகன்  நல்ல புகழ் பெற்றவன்  என்பதும்  உணர்த்தினாள்  *செவிலித்தாய்  நற்றாய்க்கும் நற்றாய்
தந்தைக்கும்  உண்மை  உணர்த்தி யபின் த் தலைவியின்  திருமணத்திற்கு ப்பெற்றோர்  உடன்படுவர் என்பது நாட்டு வழக்கு*  குறிஞ்சி  நாடன் என்றதால்  குறிஞ்சிதிணை  புலப்பட்டது* பிறர் அறியாத காதல்  புணர்தலை  உணர்த்தியது*



`








No comments:

Post a Comment